சேனாபதி லுக்கில் கமல்ஹாசன் - புகைப்படம் பகிர்ந்து உலகநாயகனுக்கு வாழ்த்து கூறிய ஷங்கர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Kamal Haasan Birthday Director Shankar Shares a Indian 2 Photo in twitter

ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் வித்யூத் ஜாம்வால், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்  நடிக்கின்றனர். லைக்கா புரொடக்சன் சார்பாக சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

கமலஹாசனின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் புதிய புகைப்படத்தை பகிர்ந்து தன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்