தெறி... - ட்விட்டரில் இந்திய அளவில் தல அஜித்தின் 'விஸ்வாசம்' முதலிடம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 12, 2019 11:31 PM
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'விஸ்வாசம்'. சிவா இயக்கியுள்ள இந்த படத்துக்கு டி. இமான் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஜெகபதி பாபு, அனிகா, விவேக், ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
தந்தை மகளுக்கிடையேயான பாசப்பிணைப்பை பேசிய இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது ட்விட்டர் இந்த அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் குறித்து வெளியிட்டுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில் தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் லோக் சபா தேர்தல், வேர்ல்டு கப் கிரிக்கெட் போட்டி மூன்றாம் இடத்திலும் மகேஷ் பாபுவின் மஹார்ஷி திரைப்படம் நான்காம் இடத்திலும் ஹாப்பி தீபாவளி என்ற ஹேஷ் டேக் 5 ஆம் இடத்திலும் உள்ளது.
#Ajith sir fans, you guys prove your #Viswasam and #Valimai yet again. Thank you for making this big.
Thank you @TwitterIndia @MomentsIndia. #Launch2020 🤩🙏 pic.twitter.com/UxrwOc5Ax8
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) November 12, 2019