2019ல் வெளியான இந்த சூப்பர் ஹிட் படங்களுக்கு விருது வழங்கும் தமிழக முதல்வர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் வெற்றியை கொண்டாடும் வகையில் வெற்றி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

CM Edappadi Palanisamy to felicitate Jayam Ravi, RJ Balaji in Vels film success meet

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் 2019ம் ஆண்டில் வெளியான 2LKG, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே பேராதரவை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. இதனை கொண்டாடும் வகையில் மிகச்சிறப்பாக நடைபெறவிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொள்கிறார்.

இந்த விழாவில் வெற்றிக்காக உழைத்திட்ட திரைப்பட கலைஞர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி சிறப்பிக்கவுள்ளார். இந்நிகழ்ச்சி வரும் நவர்.24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள Y.M.C.A மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, ஜெயம் ரவி, பிரபு, வருண், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பினை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.