''மொபைல் நம்பர் என்ன?...'' - ரன்வீர் சிங்கின் ட்விட்டர் பதிவுக்கு நாக்பூர் போலீஸ் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதன் முறையாக உலகக் கோப்பை வென்றது. இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு 83 என்ற பெயரில் பாலிவுட்டில் ஒரு படம் தயாராகி வருகிறது.

Nagpur Police comments to Ranveer Singh's Twitter post

இந்த படத்தை 'பஜ்ரங்கி பைஜான்', 'ஏக் தா டைகர்' படங்களின் இயக்குநர் கபீர் கான் இயக்க, ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

மேலும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் டெலிபோன் ஒன்றை வைத்தபடி மொபைல் நம்பர் என்ன ?  உன் சிரிப்பின் எண் என்ன ?, உன் ஸ்டைலின் எண் என்ன ? எந்த எண்ணை டயல் செய்ய ?  என்று கேட்டார்