www.garudabazaar.com
iTechUS

பிரபல சீரியலில் ஹீரோயினை காப்பாற்றும் நடிகர் விஜய் சேதுபதி ..வைரல் ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

Ninaithale Inikkum New Promo Video with Vijay Sethupathi voice

1996ஆம் ஆண்டு முதல் சிறு வேடங்களில் நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில்  கவனிக்க தக்க வகையில் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.

பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. 

நடிகர் விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

Ninaithale Inikkum New Promo Video with Vijay Sethupathi voice

இந்நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகாதொடரான நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடிகர் விஜய் சேதுபதியின் பின்னணி குரல் இடம்பெற்றுள்ளது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாதொடர் நினைத்தாலே இனிக்கும். பொம்மி & சித்தார்த் என்ற இரு கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரின் இந்த வார எபிசோடின் ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. பொம்மியை காப்பாற்ற கணவர் சித்தார்த் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி டோனரை தேடி போய் கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் சேதுபதியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசும் விஜய் சேதுபதி, "உங்கள் மனைவி எப்படி இருக்காங்க பிரதர்" என நலம் விசாரித்து "எனது ரசிகர் மன்றத் தலைவருக்கு தகவல் சொல்றேன். என் ரசிகர்கள் எல்லா இதில் இறங்கி உங்களுக்கு உதவி செய்வார்கள்" என விஜய் சேதுபதி சொல்கிறார். விஜய் சேதுபதி உதவியால் பொம்மியை காப்பாற்றுவாரா சித்தார்த் என்ற கேள்வியுடன் ப்ரோமோ வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

தொடர்புடைய இணைப்புகள்

Ninaithale Inikkum New Promo Video with Vijay Sethupathi voice

People looking for online information on Ninaithale Inikkum, Vijay Sethupathi, Zee Tamil will find this news story useful.