விஜய் சேதுபதியுடன் ‘காந்தி டாக்ஸ்’ .. BTS ஃபோட்டோ பகிர்ந்து நடிகர் சொன்ன கமெண்ட்.!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜய் சேதுபதி முன்னணி திரைப்பட நடிகராக தமிழில் வலம் வருவதுடன், தென்னிந்திய மற்றும் இந்தி மொழியிலும் படங்களில் நடிக்கிறார்.
Also Read | தளபதி என்ட்ரி.. வெளியான வாரிசு படத்தின் OFFICIAL ரிலீஸ் தேதி.. வேறமாரி போஸ்டர்!
தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட விஜய் சேதுபதி கடந்த 2004 ம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, 2010 ல் சீனு இராமசாமி இயக்கத்திலான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
அதன் பிறகுன் 2012 ல் சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி தரணிதரன் ஆகியோரின் இயக்கத்திலான முறையே பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களில் நல்ல வரவேற்பை அடுத்து நானும் ரவுடிதான், சேதுபதி, விக்ரம் வேதா, தர்மதுரை, கவண், 96, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆரஞ்சு மிட்டாய், முகில் உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

நவரசா உள்ளிட்ட வெப் தொடர்கள், ஆந்தாலஜி திரைப்படங்களிலும் நடித்த விஜய் சேதுபதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் நெகடிவ் ரோலில் மாஸ் காட்டினார். கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி திரைப்படம் வெளியானது. தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவரக திகழும் நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
இதனிடையே நடிகர் சந்தீப் கிஷன் , கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் மைக்கேல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து மராத்தி இயக்குநர் கிஷோர் பெலேகர் இயக்கும் ‘காந்தி டாக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, மராத்தி நடிகர் சித்தார்த் ஜாதவ மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் மவுனப் படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகர் சித்தார்த் ஜாதவ், “மிகவும் அமைதியான, சிறந்த நடிகர்” என விஜய் சேதுபதியை புகழ்ந்துள்ளார்.
Also Read | "வேதனைய சொன்னது ஒரு குத்தமா? 😅".. அசிம் சொன்னதும் யோசிக்காம கலாய்ச்ச Bigg Boss!! 😂







