www.garudabazaar.com
iTechUS

"விஜய் சேதுபதிய Meet பண்ணனும்".. "சும்மா ஜோக் காட்டாதீங்க ADK".. ரசிகர் கமெண்ட்டிற்கு சூப்பர் பதிலடி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

ADK reply to netizen comment in his tweet about vijay sethupathi

Also Read | Varisu : "அட நம்ம தளபதியா வண்டி ஓட்டிட்டு வர்றாரு?".. ஷாம் பகிர்ந்த Unseen வீடியோ!!.. வைரல்

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

ADK reply to netizen comment in his tweet about vijay sethupathi

இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வீட்டையே கலகலப்பாக மாற்றி இருந்தனர். இதற்கு மத்தியில், சிறந்த போட்டியாளராக வலம் வந்த கதிரவன், பண மூட்டையை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து தற்போது வெளியேறி உள்ளார். அவரது முடிவு பலரையும் அதிர்ந்து போக வைத்திருந்தது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த ADK, அசிம் மற்றும் விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் குறித்து சில ட்வீட்களை பகிர்ந்திருந்தார். அதே போல, லைவ் வீடியோவில் கூட பிக் பாஸ் வீட்டில் தனது நண்பர்களாக இருந்த அசிம் மற்றும் விக்ரமன் குறித்து நிறைய கருத்துக்களை குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.

ADK reply to netizen comment in his tweet about vijay sethupathi

அப்படி ஒரு சூழலில், நடிகர் விஜய் சேதுபதி குறித்தும் ஒரு ட்வீட்டை பகிர்ந்திருந்தார் ADK. அதில், "விஜய் சேதுபதியை சந்தித்து அவருடன் ஒரு முறையாவது உணவருந்த வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை" என குறிப்பிட்டிருந்தார். ஏடிகேவின் இந்த ட்வீட் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

ADK reply to netizen comment in his tweet about vijay sethupathi

இதனைத் தொடர்ந்து நெட்டிசன் ஒருவர், "தயவு செய்து ஜோக் செய்யாதீங்க ஏடிகே. கொஞ்சம் அமைதியா இருங்க" என ADK பதிவில் கமெண்ட் செய்திருந்தார். இதனை கவனித்த ஏடிகே, "சில நேரம் ஜோக்குகளில் கூட நிறைய மறைவான அர்த்தங்கள் இருக்கும். எனது வேலையை மக்கள் விரும்பி அது பற்றி கமெண்ட் செய்ய வேண்டும் என முன்பு நான் குறிப்பிட்டது நகைச்சுவையாக கருதப்பட்டது. இன்று எனது ட்வீட்டில் நீங்கள் கமெண்ட் செய்கிறீர்கள்" என சிறந்த பதிலடி ஒன்றை ஏடிகே கொடுத்துள்ளார்.

Also Read | "உண்மைய பேசி இவ்ளோ தூரம் வந்துருக்காரு".. விக்ரமன் டைட்டில் வின்னர் ஆகணும்.. ADK Exclusive!!

தொடர்புடைய இணைப்புகள்

ADK reply to netizen comment in his tweet about vijay sethupathi

People looking for online information on ADK, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vijay Sethupathi will find this news story useful.