www.garudabazaar.com
iTechUS

"ஆரம்பிச்சுட்டோம்ல".. வெற்றிமாறன் இயக்கும் விடுதலை.. சூப்பர் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசுரன் மற்றும் பாவ கதைகள் அந்தாலஜியில் 'ஓர் இரவு' உள்ளிட்ட படைப்புகள் இயக்கியதை தொடர்ந்து தற்போது 'விடுதலை' என்னும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

Vijay Sethupathi update about viduthalai movie vetrimaaran

எல்ட்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாகவும் உருவாகி வருகிறது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக கொண்டு தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். அதே போல, ஜெயமோகன் இந்த படத்தில் எழுத்தாளராகவும் பணிபுரிகிறார்.

பல இடங்களில் விடுதலை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இவை அனைத்தும் முடிவடைந்துள்ளதாகவும் தெரிகிறது. அதே போல, படத்தின் போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதில் சூரி ஒரு காவலர் போன்றும், விஜய் சேதுபதி ஒரு கைதி போன்றும் வருகிறார்கள். வெற்றிமாறன் படம் என்றால் இருக்கும் அதே எதிர்பார்ப்பு, விடுதலை படத்தின் மீதும் அதிகம் உருவாகி உள்ளது.

Vijay Sethupathi update about viduthalai movie vetrimaaran

இதனிடையே, விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்திருந்தது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், தற்போது விடுதலை படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விடுதலை படத்தின் முதல் பாக டப்பிங், தற்போது ஆரம்பமாகி உள்ளதாக விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார் மற்றும் படக் குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களையும் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi update about viduthalai movie vetrimaaran

People looking for online information on Elred Kumar, Ilaiyaraaja, Rs infotainment, Vetrimaaran, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.