இது Double Treat - லாஸ்லியாவின் ப்ரேக்கிங் நியூஸ்... இணையும் அந்த பிக்பாஸ் பிரபலம் யார்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லாஸ்லியா நடிக்கும் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நடிக்கவுள்ளார்.

biggboss losliya's film with aari arjuna ropes abhirami

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. ஈழத்தில் செய்தி வாசிப்பாளரான இவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் நடிகர் ஆரி கதாநாயகனாக நடிக்கும் படத்திலும் லாஸ்லியா நடிப்பதாக அறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆரி படத்தில் லாஸ்லியாவுடன் மற்றுமொரு பிக்பாஸ் பிரபலமான அபிராமி நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சந்திரா மீடியா விஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. லாஸ்லியா மற்றும் அபிராமியுடன் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது.

Entertainment sub editor