நடிகை திரிஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த 'பேட்ட' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரிஷாவின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான '96' படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாரட்டப்பட்டது.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் புதுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், தன் புதுப்படத்துக்கான பூஜை தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு 'ராங்கி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' படங்களின் இயக்குநர் சரவணன் இயக்குகிறார். இந்த படத்துக்கு பிரபல இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ளார். நடிகை திரிஷாவின் தற்போது 1818, கர்ஜணை, உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.