''மகிழ்ச்சி'' - தன் அடுத்த படம் குறித்து அறிவித்த ரஞ்சித்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் 'கபாலி', 'காலா' என அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கினார். இந்நிலையில் தனது நீலம்  புரொடக்ஷன் சார்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தை தயாரித்தார்.

Pa.Ranjith announced his next Project in Neelam Production actor Kalai is Lead

கதிர் , ஆனந்தி இணைந்து நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிர்சா முண்டா என்ற பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ரஞ்சித் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படம் குறித்து அறிவித்துள்ளார்.  அதில், தனது நீலம் புரொடக்ஷன் மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஸ்ரத்தா எண்டர்டெயின்மென்ட் இணைந்து சுரேஷ் மாரி என்பவர் இயக்கும் படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறியுள்ளார். இந்த படத்தில் நடிகர் கலையரசன் முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ள அவர், தன் ஸ்டைலில் 'மகிழ்ச்சி' என்று தெரிவித்தார்.