சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 167’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 167’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஏப்.10ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையொட்டி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக இப்படம் ரஜினிகாந்தின் 166வது திரைப்படம் என்று கூறப்பட்ட நிலையில், ரஜினிகாந்தின் பிஆர்ஓ, இது ‘தலைவர் 167’ என தெரிவித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க மும்பை பின்னணியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.