சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஏப்.10ம் தேதி முதல் மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் பூஜையில், ரஜினிகாந்த், படத் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு தலையில் டர்பன் கட்டப்பட்டது.
அப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் டர்பனை சூப்பர் ஸ்டார் அட்ஜஸ்ட் செய்தபோது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்குள் ஒளிந்திருந்த ரஜினி ரசிகர் எட்டிப்பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘பேட்ட’ திரைப்படத்தை போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
fan boy @ARMurugadoss reaction when #Thalaivar adjusts his turban is pure GOLD!! ♥️👌 Lovely clip! #Darbar kicks off with a positive vibe! pic.twitter.com/LLkRBNnMBB
— Komban (@Banned_tweeter) April 10, 2019