'கார்த்திக் டயல் செய்த எண்' - வைரலாகும் மீம்ஸ் - த்ரிஷாவின் ரியாக்சன் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா இணைந்து நடித்திருந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கார்த்திக் - ஜெஸ்ஸி என்ற இரண்டு கேரக்டர்களுக்குள் நிகழும் இயல்பான காதலும் அதன் விளைவுகளும் என மிகவும் நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருப்பார் கௌதம் மேனன்.

Trisha Reacts a meme about Gautham Menon , STR's Karthik Dial Seydha Yenn Memes | கார்த்திக் டயல் செய்த எண் பட மீம்ஸிற்கு த்ரிஷாவின் ரியாக்ஷன்

இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் இந்த படம் ரசிகர்களில் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த படத்தின் தொடர்ச்சியாக கார்த்திக் - ஜெஸ்ஸி பேசிக்கொண்டால் அவர்களது உரையாடல்கள் எப்படி இருக்கும் என்ற அடிப்படையில் ஷார்ட் ஃபிலிம் ஒன்றை இயக்கியிருந்தார் கௌதம் மேனன்.

இந்த படத்தில் மீண்டும் கார்த்திக் - ஜெஸ்ஸியாக சிம்பு மற்றும் த்ரிஷாவே நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படம் நேற்று முன் தினம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் குறித்து சமூக வலைதளங்களில் இந்த படம் குறித்த கட்டுரைகளும், மீம்களும் அதிகம் பகிரப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக இந்த ஷார்ட் ஃபிலிமில் த்ரிஷா, சிம்புவிடம் மூன்றாவது குழந்தை மாதிரி உன்ன பார்க்குறேன் என்பார். இதனடிப்படையில் த்ரிஷாவின் கையில் சிம்பு குழந்தை மாதிரி இருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட மீம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.  அதனைத் தொடர்ந்து இதுகுறித்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பகிர்ந்த த்ரிஷா, குழந்தை அழுவது போன்ற ஸ்டிக்கரை பகிர்ந்துள்ளார்.

Entertainment sub editor

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Trisha Reacts a meme about Gautham Menon , STR's Karthik Dial Seydha Yenn Memes | கார்த்திக் டயல் செய்த எண் பட மீம்ஸிற்கு த்ரிஷாவின் ரியாக்ஷன்

People looking for online information on Gautham Menon, Karthik Dial Seytha Yenn, Str, Trisha Krishnan will find this news story useful.