பப்ளி பேபியாக கீர்த்தி சுரேஷின் த்ரோபேக் ஃபோட்டோ, ஹீரோ Uncle to ஹீரோ Co-star, செம journey

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.  தமிழின் டாப் ஹீரோக்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்துள்ள கீர்த்தி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார்.

Keerthy suresh shares throwback pic taken with Mohanlal

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். கொரோனா பிரச்சனைகளால் திரையுலகம் முடங்கியிருப்பதால், அவரது பட ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இயங்கி வரும் கீர்த்தி சுரேஷ் தன் ரசிகர்களின் ட்ரீம் கேர்ளாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை அடைந்துவிட்டதைக் கொண்டாடும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ''இப்போது நாங்கள் சற்று பெரிய குடும்பம். ஆம் 5 மில்லியன் பேர் இணைந்திருக்கிறோம். நானும் நைக்கும் இந்த அன்புக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று (மே 21) மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் பிறந்த நாளுக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்து, அவருடன் சிறுமியாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

 

கொழுகொழுவென்று அழகாக இருக்கும் கீர்த்தியின் இந்த ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Entertainment sub editor

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Keerthy suresh shares throwback pic taken with Mohanlal

People looking for online information on Annaatthe, Covid 19, Keerthy Suresh will find this news story useful.