www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. பிறந்தநாளில் ரிலீசான ஸ்பெஷல் போஸ்டர்! இது வேற ரகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் புதிய ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது.

captain miller dhanush birthday new special poster

தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது.

  ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்க உள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும்  பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. Madras Regiment-ன் ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு தனுஷின் பிம்பம் போஸ்டரில் அமைந்துள்ளது.

captain miller dhanush birthday new special poster

இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். பாகுபலி படங்கள், ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படங்களுக்கு அவரது சிறப்பான வசனங்கள் பலமாக இருந்தது போல் கேப்டன் மில்லருக்கும்  கூடுதல் ஈர்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), த.ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (சண்டை காட்சி இயக்கம்), Tuney John 24am(பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.

கேப்டன் மில்லர்  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

captain miller dhanush birthday new special poster

People looking for online information on Captain Miller, Dhanush will find this news story useful.