TIKTOK-ஐ தடை செய்ய வேண்டும்... பிரபல நடிகர் கோரிக்கை.. அதற்கு அவர் சொல்லும் காரணத்தை பாருங்க..!
முகப்பு > சினிமா செய்திகள்இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு செயலியாக மாறி உள்ளது டிக் டாக். இளைஞர்கள், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் இந்த செயலியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பலரும் இந்த செயலியின் மூலம் சினிமாவுக்குள் நுழைவதால், மக்கள் அனைவரும் தங்கள் திறமையை காட்ட முயற்சி செய்கின்றனர்.

பல நன்மைகளை பயித்தாலும் இதில் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. சிலர் தங்கள் குடும்பம், வேலையை மறந்து இதிலேயே மூழ்கி விடுவதால், அவர்களின் குடும்ப வாழ்க்கையும், சமூக வாழ்க்கையும் மிகவும் பாதிப்படைகிறது. அதேபோல் சீக்கிரம் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தினால் பலர் செய்யும் வீடியோக்கள் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. அப்படி சமீபத்தில் பல நபர்களின் டிக்டாக் வீடியோக்கள் சர்ச்சை வீடியோக்களாக மாறி வருகின்றன.
இந்நிலையில் இந்தி நடிகர் குஷால் தாண்டன் இது பற்றி தற்போது கருத்து வெளியிட்டுள்ளார். அவர் "இந்த சீனாவால் தான் உலகம் முழுவதும் இந்த நிலையை அடைந்துள்ளது. ஆனால் நமது இந்தியர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். TIKTOK செயலியை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் சீன நிறுவனத்திற்கு லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது எல்லோரும் பயனற்ற TIKTOK-ல் தான் முழுநேரமும் இருக்கிறார்கள் முதலில் இதனை தடை செய்ய வேண்டும். இதுவரை டிக் டாக் செயலியை பயன்படுத்தவில்லை என்பதில், நான் பெருமை கொள்கிறேன். டிக்டாக்கை தடை செய்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.