''பயங்கரமா சண்டை போடுவேன்.. என்னை சமாதானப்படுத்த அவர்..'' - குடும்ப வாழ்க்கை.. ரம்பா Opens.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரம்பா தனது குடும்ப வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

குடும்பத்தை பற்றி மனம் திறந்த ரம்பா | actress rambha opens on her husband, childrens and family experience

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் படங்களிலும் இவர் நடித்து கலக்கினார். இதுமட்டுமின்றி சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்த இவர், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். 

இந்நிலையில் ரம்பா வீடியோ கால் மூலம் நம்முடன் உரையாடினார். அப்போது அவர் தனது குடும்ப வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 'எனக்கும் என் கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும் பயங்கரமாக சண்டை போடுவேன். கொஞ்ச நேரம் கழித்து, ஒரு காபி போட்டு வந்து வைப்பார். அதற்கு பிறகு எனது கோபம் எல்லாம் பலூன் போல காற்று இறங்கி போய்விடும். எனக்கு கடவுள் அருமையான குழந்தைகளை கொடுத்துள்ளார். அவர்களோட நான் சந்தோஷமாக இந்த வாழ்க்கையை வாழ்கிறேன்'' என தனது 10 வருட குடும்ப வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியாக பேசினார்.மேலும் மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து கேட்டதற்கு, 'இப்போது நான் ஒரு தாய். பழையபடி டூயட் எல்லாம் பாட முடியாது. எனக்கேற்றவாறு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் பார்க்கலாம்' என தெரிவித்தார். 

 

''பயங்கரமா சண்டை போடுவேன்.. என்னை சமாதானப்படுத்த அவர்..'' - குடும்ப வாழ்க்கை.. ரம்பா OPENS. வீடியோ

Entertainment sub editor