www.garudabazaar.com
iTechUS

BOX OFFICE : முதல் நாள் வசூல் வேட்டை.. துணிவு & வாரிசு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விபரம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு & வாரிசு படங்களின் முதல் நாள் தமிழக வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thunivu Varisu First Day TN Box Office Collection Difference

Also Read | BOX OFFICE : “ஆட்ட நாயகன்”.. விஜய் நடித்த 'வாரிசு'.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?

துணிவு

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு நேற்று (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thunivu Varisu First Day TN Box Office Collection Difference

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

வாரிசு

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று (11.01.2023) வெளியாகி உள்ளது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Thunivu Varisu First Day TN Box Office Collection Difference

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

Thunivu Varisu First Day TN Box Office Collection Difference

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

வசூல் நிலவரம்

வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 21 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் துணிவு படத்திற்கும் வாரிசு படத்திற்கும் இடையேயான வசூல் வேறுபாடு சுமார் 40 லட்சம் ரூபாய் முதல் 60 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | BOX OFFICE: “இப்போ நம்ம GAME ON” .. அஜித்தின் 'துணிவு'.. முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Varisu First Day TN Box Office Collection Difference

People looking for online information on Thunivu, Thunivu Varisu First Day TN Box Office Collection, Varisu will find this news story useful.