www.garudabazaar.com
iTechUS

ADK க்கு பிக்பாஸ் கொடுத்த பவர்.. இனி வீடு களைகட்ட போகுது.. லாஸ்ட்ல சொன்ன விஷயம் தான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Biggboss says ADK to plan Entertainment activities in House

Also Read | GP முத்துவின் ட்ரெண்டிங் காஸ்டியூம்.. பார்த்ததும் விக்ரமன் சொன்ன விஷயம்..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

Biggboss says ADK to plan Entertainment activities in House

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி மற்றும் மணிகண்ட ராஜேஷ் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

Biggboss says ADK to plan Entertainment activities in House

இதனிடையே, Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசீமிடம் பிக் பாஸ் கூறி இருந்தார். இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், அமுதவாணனுக்கு ஹேர் ஸ்டைலை மாற்றும்படி சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இப்படி அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்று வருகின்றன.

Biggboss says ADK to plan Entertainment activities in House

இந்நிலையில், ADK-விடம் பிக்பாஸ் பேசியிருக்கிறார். அப்போது பிக்பாஸ்,"ADK நீங்க டாஸ்க் கொடுக்கலாம். கன்ஃபெஷன் ரூம்ல கூப்பிட்டு பேசலாம். உங்களுக்கு எப்படி தோணுதோ, எண்டெர்டெயினிங்கா அப்படி இந்த வீட்டை வழிநடத்தலாம்.  Have Fun" என்கிறார். அப்போது, இருக்கையில் அமர்ந்திருந்த ADK நன்றி சொல்லியபடி அங்கிருந்து எழுந்து செல்கிறார்.

Also Read | என்னப்பா இது விக்ரமனுக்கு வந்த சோதனை.. சைகைல படம் பெயர் சொல்லணும்.. FUN மோடில் போட்டியாளர்கள்..!

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss says ADK to plan Entertainment activities in House

People looking for online information on ADK, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil will find this news story useful.