www.garudabazaar.com

"ஒரு பொருளாதார அடியாள்".. 'துணிவு' படத்தை பாராட்டி இயக்குனர் வசந்தபாலன் வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தினை பார்த்த பிறகு இயக்குனர் வசந்தபாலன் படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

Director Vasantha Balan fb post about Thunivu Movie

Also Read | GP முத்துவுக்கு ஷாக் கொடுத்த அசீம் & மைனா.. தலைவர் கொடுத்த கமெண்ட் 😅

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு நேற்று (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Director Vasantha Balan fb post about Thunivu Movie

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படமான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது. ‌

Director Vasantha Balan fb post about Thunivu Movie

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Director Vasantha Balan fb post about Thunivu Movie

துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வெயில், அங்காடித் தெரு பட இயக்குனர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில்,  "துணிவு, மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியுடன் விறுவிறுப்பான ஆக்சன் திரைப்படம்.

அஜீத் அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பும் வசனமும் திரையரங்கைக் களிப்பிற்குள்ளாக்குகிறது. பணம் சம்மந்தமாக இன்னொரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம். இயக்குநர் H.வினோத் உட்பட்ட மொத்த படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள்." என வசந்த பாலன் பதிவிட்டுள்ளார்.

Also Read | "என் கூட இன்னொரு முறை துணிவு பாரு".. மனைவிக்கு ட்வீட் செய்த 'மங்காத்தா' தயாநிதி அழகிரி!

தொடர்புடைய இணைப்புகள்

Director Vasantha Balan fb post about Thunivu Movie

People looking for online information on Ajith Kumar, Thunivu Movie, Vasantha Balan, Vasantha Balan fb post will find this news story useful.