www.garudabazaar.com

"இவங்க தான் அம்மா & அண்ணா".. குடும்பத்தினரை அறிமுகம் செய்த மஞ்சு வாரியர்! வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.

Thunivu Manju Warrier Mother and Brother Photos goes viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனது மகனுடன் எமி ஜாக்சன் நடத்திய போட்டோ ஷூட்😍.. வைரலாகும் CUTE போட்டோஸ்   

தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பொங்கலுக்கு ரிலீசான துணிவு படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று பொங்கலை முன்னிட்டு வெளியானது. இந்தத் திரைப்படம்  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் நடிகர்கள் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,  கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. 

Images are subject to © copyright to their respective owners.

மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த BMW பைக் வாங்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சு வாரியர் தனது குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து புகைப்படங்களையும்  பகிர்ந்துள்ளார். 

Images are subject to © copyright to their respective owners.

மஞ்சு வாரியர் தாயார் எழுதிய நிலவேட்டம் என்ற நூலினை வெளியீட்டு விழாவில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Images are subject to © copyright to their respective owners.

மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இவ்விழாவில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "வெள்ளிக்கிழமை அதுவுமா".. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த 'லால் சலாம்' படத்தின் BTS PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Manju Warrier Mother and Brother Photos goes viral

People looking for online information on Manju Warrier, Manju Warrier Family will find this news story useful.