இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் முக்கியமான சூப்பர் படங்கள்.. எப்போ? எதுல? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

This week OTT Release Movies Amazon prime Netflix Zee Sony LIV

Also Read | தனுஷின் 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கை.. "வாத்தி" படக்குழு வெளியிட்ட புதிய லுக் போஸ்டர்!

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த மே இரண்டாவது வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. பீஸ்ட் படம் பிரபல சன் நெக்ஸ்ட் தளத்திலும் நெட்பிளிக்ஸ் தளத்திலும் இன்று மே மாதம் 11 ஆம் தேதி வெளியாகி உள்ளது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. கடந்த மார்ச் 11 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் பல அரசியல் சினிமா பிரபலங்களாலும் பாராட்டப்பட்டது. காஷ்மீரிலிருந்து காஷ்மீரி இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை அடிப்படை கதை களமாக கொண்டு படம் வெளியாகியது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம், 330 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஜீ5 ஒடிடியில் வரும் மே மாதம் 13 ஆம் நாள் வெளியாக உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

This week OTT Release Movies Amazon prime Netflix Zee Sony LIV

புழு

மம்மூட்டி மற்றும் பார்வதி ஆகியோருடன், மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, இந்திரன் மற்றும் மாளவிகா மேனன் ஆகியோர் புழு படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மே-13 அன்று நேரடியாக சோனி லிவ் ஒடிடியில் ஒளிபரப்பாக உள்ளது. புதுமுக இயக்குனர் ரத்தின ஷர்ஷாத் "புழு" படத்தை இயக்கியுள்ளார். முதல் முறையாக மம்மூட்டி ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நடித்துள்ளார்.

This week OTT Release Movies Amazon prime Netflix Zee Sony LIV

The Matrix Resurrections

The Matrix Resurrections, லானா வச்சோவ்ஸ்கி இயக்கிய மேட்ரிக்ஸ் தொடரின் நான்காவது பாகமாகும். இந்தத் திரைப்படத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு (முந்தைய திரைப்படம் 2003 இல் வெளியிடப்பட்டது) முதல் மூன்று பாகங்களில் இருந்து பெரும்பாலான நடிகர்கள் தங்கள் பாத்திரங்களை மீண்டும் நடித்துள்ளனர். படம் 22 டிசம்பர் 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. Amazon Prime வீடியோவில் மே 12 அன்று வெளியாக உள்ளது.

This week OTT Release Movies Amazon prime Netflix Zee Sony LIV

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் முக்கியமான சூப்பர் படங்கள்.. எப்போ? எதுல? முழு தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

This week OTT Release Movies Amazon prime Netflix Zee Sony LIV

People looking for online information on Amazon Prime, Netflix, OTT Release, OTT Release Movies, Zee Sony LIV will find this news story useful.