கமல்- அனிருத் காம்போவில் ‘தரலோக்கல்’ குத்து – வெளியானது ‘பத்தல பத்தல’ Glimpse

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனிருத் இசையில் விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல என்ற பாடல் இன்றிரவு வெளியாக உள்ளது.

Kamal anirudh combo pathala pathala song new glimpse

Also Read | SVP FROM MAY12: “நானும் ராஜமௌலியும் சேரும் படம்… ”… மகேஷ் பாபு கொடுத்த செம்ம exciting தகவல்!

கமலின் விக்ரம்…

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக  2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படம் வெளியானது. இந்நிலையில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு அவரின் அடுத்த படமாக விக்ரம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்... இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Kamal anirudh combo pathala pathala song new glimpse

கமல்- அனிருத்…

இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல்- அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் விக்ரம்  படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த பாடல் பற்றிய சர்ப்ரைஸ் தகவல் ஒன்றை சமீபத்தில் அனிருத் பகிர்ந்திருந்தார். கமல்ஹாசன் ‘பத்தல பத்தல’ என்ற பாடலை எழுதி பாடியுள்ளதாக அனிருத் அறிவித்துள்ளார். இது கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kamal anirudh combo pathala pathala song new glimpse

புதிய Glimpse…

இதையடுத்து இன்று காலை இந்த பாடலுக்காக கமல் நடனமாடுவது போன்ற போஸ்டரை  படக்குழு பகிர அது இணையத்தில் வைரலானது. அதையடுத்து தற்போது பாடலின் புதிய glimpse வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. கமலின் பிரபலமான குத்துப் பாடலான  ‘அண்ணாத்த ஆடுறார் ‘ பாடலை நினைவூட்டும் வகையில் கமலின் நடனம் இருக்க, அனிருத் இசையில் தரலோக்கல் குத்துப் பாடலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Kamal anirudh combo pathala pathala song new glimpse

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

கமல்- அனிருத் காம்போவில் ‘தரலோக்கல்’ குத்து – வெளியானது ‘பத்தல பத்தல’ GLIMPSE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal anirudh combo pathala pathala song new glimpse

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal anirudh combo, Kamal Haasan, Lokesh Kanagaraj, Pathala pathala song, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.