வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா… பிரபல ஓடிடியில் நேரடி வெளியீடு… Title உடன் வெளியான firstlook!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Andrea vetrimaaran ANAL MELAY PANITHULI direct ott release

Also Read | விஜய் தேவரகொண்டா- மைக் டைசன் கூட்டணியில் லைகர்… வெளியானது அட்டகாசமான HUNT தீம்!

நடிப்பும் பாட்டும்…

கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதற்கு முன்னர் சில படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்த ஆண்ட்ரியா சில  நடிகைகளுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பிலும் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஆண்ட்ரியா. அவர் நடித்த தரமணி மற்றும் வட சென்னை உள்ளிட்ட படங்கள் அவருக்கு கூடுதல் பாராட்டுகளை பெற்றுத் தந்தன.

Andrea vetrimaaran ANAL MELAY PANITHULI direct ott release

சமீபத்தைய படங்கள்…

சமீபத்தில் 'மாஸ்டர்' மற்றும் 'அரண்மனை 3' ஆகிய படங்களில் தோன்றி இருந்த நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக பிசாசு 2, நோ என்ட்ரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிசாசு 2 திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றன.  பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Andrea vetrimaaran ANAL MELAY PANITHULI direct ott release

அனல் மேலே பனித்துளி…

இந்நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அனல் மேலே பனித்துளி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படம் நேரடி ஓடிடி வெளியீடாக சோனி லைவ் தளத்தில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பும் போஸ்டரும் கவனம் ஈர்க்கும் வகையில் வெளியாகியுள்ள நிலையில் படத்தைப் பற்றி ஆண்ட்ரியா “இந்த படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இதன் முதல் லுக் போஸ்டரை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

Andrea vetrimaaran ANAL MELAY PANITHULI direct ott release

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா… பிரபல ஓடிடியில் நேரடி வெளியீடு… TITLE உடன் வெளியான FIRSTLOOK! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Andrea vetrimaaran ANAL MELAY PANITHULI direct ott release

People looking for online information on Anal Malay Panithuli, Andrea, ஆண்ட்ரியா, வெற்றிமாறன், OTT Release, Vetrimaaran will find this news story useful.