“உங்க குடும்ப பெருமைய காப்பாத்திட்டீங்க”…. அனிருத்தை வியந்து பாராட்டிய கமல்ஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் அனிருத் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Kamalhaasan applauded anirudh family lineage

Also Read | 20 YEARS OF DHANUSH: “நம்பவே முடியல” “குரு செல்வராகவனுக்கும் தந்தைக்கும்”… தனுஷ் நெகிழ்ச்சி

அனிருத் – கமல் கூட்டணி…

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக  2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படம் வெளியானது. இந்நிலையில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு அவரின் அடுத்த படமாக விக்ரம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.. மொத்தமாக 110 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Kamalhaasan applauded anirudh family lineage

பத்தல பத்தல….

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் இன்று வெளியாக உள்ளது. இந்த பாடல் பற்றிய சர்ப்ரைஸ் தகவல் ஒன்றை சமீபத்தில் அனிருத் பகிர்ந்திருந்தார். கமல்ஹாசன் ‘பத்தல பத்தல’ என்ற பாடலை எழுதி பாடியுள்ளதாக அனிருத் அறிவித்துள்ளார். மேலும் பாடல் எழுதுவதற்காக அனிருத், கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றன.

Kamalhaasan applauded anirudh family lineage

அனிருத் பற்றி கமல்…

இந்நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அனிருத்தைப் பாராட்டும் விதமாக இட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “நீங்கள் எவ்வளவு பெரிய பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் கொள்ளு தாத்தா முதல் நீங்கள் வரை, ஒரே குடும்பத்தில் எத்தனை திறமையாளர்கள் மற்றும் சாதனையாளர்கள். உங்கள் குடும்பத்த்தின் பெருமைக்கு ஏற்றவாறு வாழ்கிறீர்கள். என் இளம் நண்பரே உங்களுக்கு அதிக வலிமை கிடைக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.

Kamalhaasan applauded anirudh family lineage

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

“உங்க குடும்ப பெருமைய காப்பாத்திட்டீங்க”…. அனிருத்தை வியந்து பாராட்டிய கமல்ஹாசன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan applauded anirudh family lineage

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Kamalhaasan applaud anirudh, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.