www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்.. வெளியான கொலமாஸ் FIRST LOOK! தீயாய் பரவும் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் முதல் லுக் வெளியாகி உள்ளது.

Dhanush upcoming netflix film The Gray Man first look

சில நாட்களுக்கு முன்னதாக தனுஷ் ட்விட்டரில் 'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் பணிபுரிவது குறித்து அறிவித்தார். அதில், “ நெட்ஃபிளிக்ஸ்காக ரஸ்ஸோ பிரதர்ஸ் ('அவெஞ்சர்ஸ்', 'கேப்டன் அமெரிக்கா: வின்டர் சோல்ஜர்') இயக்க, ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் நடிக்கும் 'தி கிரே மேன்' படத்தில் நான் சேரப் போவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

Dhanush upcoming netflix film The Gray Man first look

இந்த அற்புதமான அதிரடி அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எனக்குக் காட்டி வரும் அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்பான ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அனைவரையும் நேசிக்கிறேன். அன்பை பரப்புங்கள்… !" என தெரிவித்திருந்தார். 

தனுஷ் 2018 ஆம் ஆண்டு வெளியான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படத்தின் மூலம் சர்வதேச அளவில் அறிமுகமானார். தி கிரே மேன் படத்தில் ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Dhanush upcoming netflix film The Gray Man first look

இத்திரைப்படத்தில் ஒரு சிஐஏ ஏஜெண்டாக கோஸ்லிங் நடித்துள்ளார். MCU படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த எவன்ஸ், இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மார்க் கிரேனியின் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் $200 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

Dhanush upcoming netflix film The Gray Man first look

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷின் முதல் லுக் வெளியாகி உள்ளது. காரின் மேல் தாவி நிற்கும் புகைப்படமாக அமைந்துள்ளது. தனுஷ் முகத்தில் காயமும் காணப்படுகிறது. தி கிரே மேன் படத்தில், ரெஜ்-ஜீன் பேஜ், அனா டி அர்மாஸ், வாக்னர் மௌரா, பில்லி பாப் தோர்ன்டன் மற்றும் ஆல்ஃப்ரே வுடார்ட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்.. வெளியான கொலமாஸ் FIRST LOOK! தீயாய் பரவும் போட்டோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush upcoming netflix film The Gray Man first look

People looking for online information on Dhanush, Netflix, The Gray Man will find this news story useful.