“VTV சிம்பு மாதிரி இங்கதான் Propose பண்ணேன்”… நகுல்- ஸ்ருதி தம்பதியின் Cute வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நகுல் ஸ்ருதி தம்பதியினர் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இயங்கி வரும் நட்சத்திரத் தம்பதிகளாக இருந்து வருகின்றனர்.

Actor Nakul cute video with his wife shruthi

Also Read | கமல்- அனிருத் காம்போவில் ‘தரலோக்கல்’ குத்து – வெளியானது ‘பத்தல பத்தல’ Glimpse

நகுல்- ஸ்ருதி தம்பதி…

நகுல் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் முன்னணி நடிகையான தேவயானியின் சகோதரர் ஆவார்.  பாய்ஸ் படத்துக்குப் பிறகு  நகுல் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். படங்கள் தவிர்த்து நகுல் ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று  வருகிறார். ஸ்ருதி என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் திருமணம் செய்துகொண்டார். நடிகர் நகுலுக்கும் அவரது மனைவி ஸ்ருதிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Actor Nakul cute video with his wife shruthi

வித்தியாசமான பிரசவம்…

நகுல் ஸ்ருதி தம்பதியினர் வித்தியாசமான முறையில் மருத்துவமனைக்கு செல்லாமல் குழந்தை பிறப்பை மேற்கொண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்களை அவர்கள் இணையத்தில் பகிர்ந்திருந்தனர். அதற்கு விமர்சனங்களும் எழுந்தன. அதுகுறித்து நகுலின் மனைவி ஸ்ருதி பிரசவத்தின் போது, அது எப்படி இருக்க வேண்டும் என்று தான் எடுத்த முடிவை பலர் ஆரம்பத்தில் விமர்சித்ததாகவும், பிறகு, அதனால்தான் தனக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்துள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Actor Nakul cute video with his wife shruthi

On this day video…

இந்நிலையில் இன்று நகுல்- ஸ்ருதி தம்பதியினர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் நகுலும் ஸ்ருதியும் ஒரு வீட்டின் முன் நிற்க நகுல், “11 ஆண்டுகளுக்கு முன்பு இதே கேட்டுக்கு முன்புதான் விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு மாதிரி propose பண்ணினேன். இதே நாள் மே 11. ஆனால் அந்த படத்தில் வருவது போல க்ளைமேக்ஸ் இல்லை. இந்த கதையில் ரெண்டு குட்டீஸ்’ என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Nakul cute video with his wife shruthi

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

“VTV சிம்பு மாதிரி இங்கதான் PROPOSE பண்ணேன்”… நகுல்- ஸ்ருதி தம்பதியின் CUTE வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Nakul cute video with his wife shruthi

People looking for online information on நகுல், ஸ்ருதி நகுல், Nakul, Nakul Latest Video, Shruthi Nakul will find this news story useful.