Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

இந்த வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் முக்கிய படங்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

This Week August 18 OTT Release Movies Web Series

Also Read | சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் ரீமேக்.. டீசர் ரிலீஸ் எப்போ? போஸ்டருடன் வெளியான மாஸ் அப்டேட்!

யானை (தமிழ்)

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'யானை' படம் கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவது 1500+ திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

This Week August 18 OTT Release Movies Web Series

யானை படத்தில் நடிகர் அருண் விஜய் ரவி எனும் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் 'ஜெபமலர்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் நிறுவனம் (ZEE5 OTT & ZEE தமிழ்) கைப்பற்றியது.

இந்த படம் நாளை ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜி5 தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் - வெப் சீரிஸ்

தமிழ் ராக்கர்ஸ் தொடர் பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராகும்.

தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது, அவர் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட நடிகரின், மிகப்பெரும் பட்ஜெட் படம், இணைய திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து போராடுகிறார். அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார். சைபர் க்ரைம் திருட்டுக்கு எதிரான போரை இந்த நிகழ்ச்சி  வெளிப்படுத்துகிறது.

This Week August 18 OTT Release Movies Web Series

அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகை வாணி பஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி லிவ் தளத்தில் நாளை ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது.

மகள் (மலையாளம்)

சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் மீரா ஜாஸ்மின், தேவிகா சஞ்சய், மற்றும் ஜெயராம் நடித்த இப்படம் மனோரமா மேக்ஸ் தளத்தில் திரையரங்க வெளியீட்டுக்கு பின்னர் இன்று‌ (18.08.2022) வெளியிடப்பட்டது.

Also Read | PS1 PONNIYIN SELVAN: ஆதித்த கரிகாலனின் மிரட்டலான லுக்.. பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்!

மேலும் செய்திகள்

This Week August 18 OTT Release Movies Web Series

People looking for online information on OTT Release Movies, Web Series will find this news story useful.