Viruman Logo Top
www.garudabazaar.com

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்'.. தமிழ்நாட்ல இத்தனை தியேட்டர்ல ரிலீசா? ஏரியா வாரியாக முழு LIST!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் தமிழ்நாட்டின் அனைத்து ஏரியா தியேட்டர் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

Dhanush Thiruchitrambalam Movie Tamilnadu Theatre List

Also Read | 90S ‘ஈரமான ரோஜாவே’ பட ஹீரோயினா இவங்க? இப்போ ஆன்மீக போதகரா? எப்படி இருக்காங்க பாருங்க.!

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படம் இன்று ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இப்படத்தின் தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸை ஒட்டி திருச்சிற்றம்பலம் படத்தின் தமிழக வினியோகஸ்தரான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் படம் வெளியாகும் தியேட்டர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Dhanush Thiruchitrambalam Movie Tamilnadu Theatre List

சென்னையில் 19 திரையரங்குகளிலும், செங்கல்பட்டு ஏரியாவில் 35 திரையரங்குகளிலும், சேலம் ஏரியாவில் 28 திரையரங்குகளிலும், திருநெல்வேலி கன்னியாகுமரி ஏரியாவில் 27 திரையரங்குகளிலும், திருச்சி மற்றும் மதுரை ஏரியாவில் தலா 38 திரையரங்குகளிலும், கோயம்புத்தூர் ஏரியாவில் 51 திரையரங்குகளிலும், வட ஆற்காடு ஏரியாவில் 39 திரையரங்குகளிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 25 திரையரங்குகளிலும் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி உள்ளது.

Dhanush Thiruchitrambalam Movie Tamilnadu Theatre List

தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி உள்ளது என ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடிக்கிறார்கள்.

Dhanush Thiruchitrambalam Movie Tamilnadu Theatre List

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

Dhanush Thiruchitrambalam Movie Tamilnadu Theatre List

Also Read | பள்ளி மாணவர்களுடன்.. "பத்தல.. பத்தல..".. பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி செம்ம டான்ஸ்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Thiruchitrambalam Movie Tamilnadu Theatre List

People looking for online information on Dhanush, Thiruchitrambalam will find this news story useful.