www.garudabazaar.com

சத்குரு ஜக்கி வாசுதேவ்-வுடன் GP முத்து.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்! இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் ஜி.பி‌. முத்து கலந்து கொண்டார்.

GP Muthu with Sadhguru Jaggi Vasudev at Isha Maha Shivaratri

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "விவேக், மயில்சாமி ஆகியோரது இழப்பு.." - மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி ரஜினி உருக்கம்

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர். இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது.  டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. 

GP Muthu with Sadhguru Jaggi Vasudev at Isha Maha Shivaratri

Images are subject to © copyright to their respective owners.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் G.P. முத்து என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சன்னி லியோன்  நடிப்பில் வெளிவந்த ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் ஜி.பி. முத்து நடித்திருந்தார்.

GP Muthu with Sadhguru Jaggi Vasudev at Isha Maha Shivaratri

Images are subject to © copyright to their respective owners.

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடித்த இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். மேலும், அஜித் நடித்த துணிவு படத்தில் ஜி.பி. முத்து சிறிய வேடத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

GP Muthu with Sadhguru Jaggi Vasudev at Isha Maha Shivaratri

Images are subject to © copyright to their respective owners.

ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா  கொண்டாடப்படும்.

இந்த வருடம் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில்  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். 

GP Muthu with Sadhguru Jaggi Vasudev at Isha Maha Shivaratri

Images are subject to © copyright to their respective owners.

சினிமா பிரபலங்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் என பலரும் இந்த சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர். நடிகைகள் மிருணாளினி ரவி, மேகா ஆகாஷ், மம்தா மோகன்தாஸ், தமன்னா, ஐஸ்வர்யா ஆகியோர் ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டனர்.

GP Muthu with Sadhguru Jaggi Vasudev at Isha Maha Shivaratri

Images are subject to © copyright to their respective owners.

இது தொடர்பான புகைப்படங்களை ஜி.பி. முத்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சத்குரு ஜக்கி வாசுதேவ்-வுடன் இருக்கும் புகைப்படத்தையும், நடிகை ஐஸ்வர்யா உடன் இருக்கும் புகைப்படத்தையும் ஜி.பி. முத்து பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Also Read | "மயில்சாமியின் மரணம் தற்செயலானது அல்ல".. - உருக்கமாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu with Sadhguru Jaggi Vasudev at Isha Maha Shivaratri

People looking for online information on GP MUTHU, Isha Maha Shivaratri, Sadhguru Jaggi Vasudev will find this news story useful.