''அழகிய சூரியனும் அவள் விரல் தொட...'' - விக்னேஷ் சிவன் எடுத்த நயன்தாராவின் வைரல் ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 18, 2019 01:43 PM
நயன்தாரா தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லி இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜிகே விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து நயன்தாரா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்தன.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், சூரியன் பின்னணியில் நயன்தாராவின் கைகளை வைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அழகிய சூரியனும் அவள் விரல் தொட்டு விளையாட ஆசைப்பட்டது. என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Nayanthara, Vignesh Shvn