''இன்கேம் இன்கேம் காவாலே...'' - விஜய் பற்றி தமிழில் பேசி அசத்திய ராஷ்மிகா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 18, 2019 03:29 PM
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த பெரும் வரவேற்பை பெற்ற படம் 'கீதா கோவிந்தம்'. குறிப்பாக இந்த படத்தில் இடம் இன்கேம் இன்கேம் காவாலி என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் இணைந்து மீண்டும் டியர் காம்ரேட் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். அந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை பரத் கம்மா இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படம் குறித்து ராஷ்மிகா மந்தனா, பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது தமிழில் பேசி அசத்தினார்.
இந்த படத்துக்காக மாநில அளவிலான கிரிக்கெட் பிளேயராக நடிக்கிறேன். அதற்காக 5 மாதங்களாக கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொண்டேன். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதால் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன்.
''இன்கேம் இன்கேம் காவாலே...'' - விஜய் பற்றி தமிழில் பேசி அசத்திய ராஷ்மிகா வீடியோ