ஜூலை ரேஸில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார் - அடுத்தப்படம் ரிலீஸ் தேதி இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 18, 2019 05:17 PM
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'பில்லா 2’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கியுள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை எக்சட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இப்படத்தில், நயன்தாரா, பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டீமு டக்கட்டாலோ இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோரே கெரியாக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் ஜூலை.26ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடிகை நயன்தாரா, அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படத்திலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.