பிக்பாஸ் பிரபலத்தின் பட ஸ்பெஷல் ஷோவில் சனம் ஷெட்டியுடன் தர்ஷன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 15, 2019 11:44 AM
தமிழின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் சேரன். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு லாஸ்லியாவிற்கும் அவருக்கும் நிலவிய தந்தை மகள் உறவு அதிகம் பேசப்பட்டது.
பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் சேரன் தான் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ராஜாவுக்கு செக் பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பல்லட்டே கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சாய் ராஜ் குமார் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சேரனுடன் இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, வினோத் எஜமான்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் நடைபெற்றது. அதில் தர்ஷன், சனம் ஷெட்டியுடன் கலந்துகொண்டார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.