சீயான் விக்ரம் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் 'தங்கலான்' அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் பா. ரஞ்சித் தங்கலான் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், "தங்கலான் படத்தின் 80% படப்பிடிப்பு நிறைவடைந்தது. 55 நாட்கள் கோலார் தங்க வயலில் படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு கோலார் தங்க வயலில் மீதம் உள்ளது. படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் பணிகள் நிறைய உள்ளன. 2023 ஆம் ஆண்டு இறுதியில் தங்கலான் படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக" பா. ரஞ்சித் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தங்கலான் படத்தின் சிறப்பு வீடியோ காட்சிகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேக வடிவமைப்பு போஸ்டருடன் இந்த தகவலை இயக்குனர் பா. ரஞ்சித் வழங்கி உள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Pa Ranjith Answer About Thangalaan Movie Release Plan
- Chiyaan Vikram Thangalaan Movie Latest Image KGF
- Chiyaan Vikram Condolences To Actor Ajith Father Demise
- Jayaram For Mahesh Babu Pooja Hegde SSMB28 Trivikram Srinivas
- Oo Solriya Oo Oohm Solriya Ramar Fun With Vikraman, Rachitha
- Actress Anicka Vikraman Exclusive Interview அனிகா விக்ரமன்
- Pa Ranjith Vikram Thangalaan Movie Shooting Spot BTS Image
- Malavika Mohanan Shared Thangalaan Movie BTS Image Clicked By Vikram
- Anika Vikraman Allegedly Says Her Ex Boyfriend Beat Her
- Vikraman And Aari Met Recently Pic Gone Viral
- Pa Ranjith Playing Cricket In Thangalaan Movie Shooting Spot
- Vikraman Latest Photoshoot Video Went Viral On Social Media
தொடர்புடைய இணைப்புகள்
- LOKI-"HONEST Aah இந்த கதை பண்ணமாட்டாரு -னு தான் நெனச்சேன் " #leo #shorts
- MYSSKIN-"உங்கள மாறி ஆள் -னாலதான் CINEMA எடுக்க முடியாம கஷ்டப்படறோம் #Shorts
- உதயம் THEATRE -லே வெளிய நிப்போம் 😢| SASIKUMAR EXCLUSIVE INTERVIEW #shorts #shortvideo
- நீங்க இறங்கி ஆடுங்க Pa. Ranjith சார்.. இது சென்னை-28 பரம்பரை.. ஆட்டநாயகன் Moment..!
- Pa. Ranjith-னா சும்மாவா🔥 All Area-லயும் ஆட்டநாயகன்.. இது சென்னை-28 பரம்பரை Moment..!
- 36 வருஷம் முன்னாடி🔥🔥 இவரு பிறக்கும்போதே KAMAL ரசிகனா தான் பிறந்து இருக்காரு..😮❤️ #LokeshKanagaraj
- LCU-ல Mankatha😲 Leo-வ Meet பண்ண Rolex💥 Stephen Devassy LIVE BGM Performance🔥
- "100 கோடி சம்பளம் வாங்கி என்ன பண்ணுவாங்க?" 🙄 Sunaina ROFL Interview
- நடிகர் மனோபாலா இரங்கல் | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- நடிகர் யோகிபாபு ட்வீட் | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- விஜயகாந்த் தரப்பில் வெளியான இரங்கல். | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow
- "சிரிக்க வைக்கும் சித்தனே. சிவனுடைய பக்தனே." - நடிகர் சாம்ஸ் தமது இரங்கல் | பெரும் சோகம்.. நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..! - Slideshow