"யாரையும் நம்பாதீங்க".. Ex காதலர் விவகாரத்தில் தனது தோழி குறித்து அனிகா விக்ரமன் பேட்டி..!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை அனிகா விக்ரமன் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய முன்னாள் காதலர் மூலம் தனக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் அவர்.
தமிழில் விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அனிகா விக்ரமன். இந்த திரைப்படங்களை தவிர மலையாள திரை உலகிலும் பல திரைப்படங்களில் நடித்த அனிகா விக்ரமன் அடிப்படையில் கேரளாவை சேர்ந்தவர். இவர் தன்னுடைய முன்னாள் காதலன் தாக்கியதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். முன்னதாக தன்னுடைய முன்னாள் காதலர் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டிய அனிகா விக்ரமன் இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த புகாரில் நடிகை அனிகா விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலர் தன்னை உடல் அளவிலும் மனதளவிலும் பல வருடங்களாகவே துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் பெங்களூர் போலீசாரிடத்தில் புகார் அளித்ததாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நமது சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "ஆரம்பத்துல எல்லாம் சரியா தான் இருந்தது. அமெரிக்காவுல அவர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு. சாதாரணமா காதலர்களுக்கு இடையே வருவதை போல அப்பப்போ சில பிரச்சனைகள் வந்திருக்கு. ஆனா அவர் இவ்வளவு மோசமா நடத்துப்பாருன்னு எனக்கு தெரியாம போயிருச்சு.
ரெண்டு பேரும் சண்டை போட்டோம். அவர் என்னை மோசமா தாக்கிட்டாரு. என் போனை எடுத்துகிட்டாரு. அதை கொடுத்திடு, என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன்னு கால்ல விழுந்து கெஞ்சுனேன். ஆனா, என் முகத்திலேயே தாக்கினார். மேலும், எப்படி நீ இனிமே நடிக்கிறன்னு பாருக்குறேன்னு சொன்னாரு. நான் எழுந்து பாத்ரூமுக்குள்ள ஓடிட்டேன். அதுக்கு அப்புறம் தான் கண்ணாடியில் என் முகத்தை பார்த்ததும் நான் கதறி அழுதேன். அதுக்கப்புறமும் அவரோட கோபம் குறையல. அங்கிருந்து வெளியேறி போலீஸ்ல புகார் கொடுத்தப்போ அவர் எதிர்பார்த்தது மாதிரியே அங்கிருந்து தப்பிச்சு போய்ட்டாரு" என்றார்.
மேலும் பேசியவர், “பிறகு வந்து என் காலில் விழுந்து மண்டியிட்டு கதறினார். அவருக்கு இரண்டு மூன்று ப்ராஜெக்ட் கைநழுவி சென்றதால் இப்படியான பிரச்சனை இருக்கும் என்று நினைத்தேன். சைக்காட்ரிஸ்ட் டாக்டரிடமும் அழைத்தேன். ஆனாலும் சாலிகிராமம் சாலைகளில் காரில் வைத்தும், வீதிகளில் வைத்தும் அவர் தாக்கியது உள்ளிட்ட விஷயங்களைக் காணும் போதுதான் அவர் இவ்வளவு வன்முறையை கையாளுகிறார் என்பது தெரியவந்தது. அதன் பிறகு இந்த உறவை முறித்துக் கொண்ட பிறகு பெங்களூர் சென்று நாங்கள் ஏற்கனவே எடுத்திருந்த வீட்டில் தங்கினோம். அவருக்கு உதவும் எண்ணத்தில் நான் அவரை அதே வீட்டில் தங்கவைத்தேன்.
ஆனால் அப்போது அவர் என் போனில் யாருக்கு நான் மெசேஜ் செய்கிறேன் என்பதை எல்லாம் பார்த்து இருந்தார். அதற்கு அவருக்கு அதிகாரமே இல்லை. நாங்கள் ஒன்றாய் சேர்ந்து வாழும் போதே அதை பார்ப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை எனும் போது இப்போது எங்களுக்கு இடையில் எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லை என்கிற நிலையில் கூட அவர் என் போனை எடுத்து, இதையெல்லாம் பார்த்திருந்தார். அதன் பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. என்னுடைய வாட்ஸ் ஆப் அவருடைய கம்ப்யூட்டரிலும் இணைக்கப்பட்டிருந்தது. நானும் சரி என்று விட்டு விட்டேன். அதன் பிறகுதான் சென்னையில் அவர் என்னை தாக்கிய சம்பவங்கள் நடந்தன, நான் புகார் கொடுத்திருந்தேன். அது எதற்காக என்றால் அவருக்கு அதை உணர்த்துவதற்காக மட்டும் தான். மற்றபடி அவரை ஜெயிலில் போட வேண்டிய நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் அவர் எனக்காக துணை நின்றது என்பதெல்லாம் பொய் என்று தாமதமாக உணர்ந்தேன்.
இருப்பினும் செட்டில்மெண்ட் கேட்டார்கள், அதை நான் புறக்கணித்தேன். அடுத்ததாக நான் ஹைதராபாத் செல்ல வேண்டியிருந்தது. அங்கு என்னுடைய நண்பர் எனக்கு உதவி செய்வதாக இருந்தார். ஆனால் அவருக்கு மிரட்டல் வந்தது. ஒரு வழியாக அனைத்தையும் முடிந்து நான் ஹைதராபாத் வந்து விட்டேன். ஆனால் என்னுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காதது தான் இதிலிருந்த கஷ்டமான விஷயம். அவர்களுக்கு எல்லாம் முடிந்து சொல்லலாம் என்று இருந்தேன். கூடுதலான கஷ்டம் என்னவென்றால் என்னுடைய நீண்ட வருட நெருக்கமான தோழி என் பின்னால் இருந்து அவருக்கு உதவி செய்து கொண்டு இருந்தாள் என்பது தெரியவந்து அதிர்ச்சியாக இருந்தது. நீங்களும் யாரையும் நம்பாதீர்கள் உங்கள் வாழ்க்கையில்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
"யாரையும் நம்பாதீங்க".. EX காதலர் விவகாரத்தில் தனது தோழி குறித்து அனிகா விக்ரமன் பேட்டி..! வீடியோ