www.garudabazaar.com

'தங்கலான்' ஷூட்டிங்கில் மாளவிகா மோகனன்.. சீயான் விக்ரம் எடுத்த சூப்பர் போட்டோ! TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மாளவிகா மோகனனை சீயான் விக்ரம் புகைப்படம் எடுத்துள்ளார்.

Malavika Mohanan Shared Thangalaan Movie BTS Image Clicked by Vikram

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சோழர் வரலாற்றை மையமாக வைத்து புதிய படம்.. ஆசையை வெளிப்படுத்திய இயக்குனர் மோகன் ஜி..!

நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Malavika Mohanan Shared Thangalaan Movie BTS Image Clicked by Vikram

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது.  ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார்.

Malavika Mohanan Shared Thangalaan Movie BTS Image Clicked by Vikram

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் மாளவிகா மோகனன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Malavika Mohanan Shared Thangalaan Movie BTS Image Clicked by Vikram

Images are subject to © copyright to their respective owners.

அதில் தங்கலான் ஷூட்டிங்கில் மாளவிகா மோகனனை சீயான் விக்ரம் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, "பாம்புகள், ஏணிகள், நிழல்கள். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் உங்களுடன்  சியான் விக்ரம் போன்ற தனித்துவமான போட்டோகிராபர் இருக்கும் போது" என தலைப்பிட்டு புகைப்படத்தை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.

Also Read | OSCARS: "அடடே.. ரொம்ப அழகா இருக்கீங்க".. தீபிகா படுகோனை புகழ்ந்து தள்ளிய கங்கனா ரனாவத் 😍..!

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Shared Thangalaan Movie BTS Image Clicked by Vikram

People looking for online information on Malavika Mohanan, Thangalaan, Vikram will find this news story useful.