Anika Vikraman : நடிகையை தாக்கினாரா EX பாய் ஃப்ரண்ட்.? காயமான முகத்துடன் பரபரப்பு குற்றச்சாட்டு..!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அனிகா விக்ரமன்.
![Anika Vikraman allegedly Says Her Ex Boyfriend Beat Her Anika Vikraman allegedly Says Her Ex Boyfriend Beat Her](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/anika-vikraman-allegedly-says-her-ex-boyfriend-beat-her-photos-pictures-stills.jpg)
Also Read | The Legend : "தி லெஜண்ட் திரைப்படத்திலும் விழிப்புணர்வு மெசேஜ்..".. கலங்கவைத்த மறைந்த நடிகர் விவேக்..!
இந்த திரைப்படங்களை தவிர மலையாள திரை உலகிலும் பல திரைப்படங்களில் நடித்த அனிகா விக்ரமன் அடிப்படையில் கேரளாவை சேர்ந்தவர். இவர் தன்னுடைய முன்னாள் காதலன் தாக்கியதாக தற்போது பரபரப்பான குற்றச்சாட்டை வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி நடிகை அனிகா விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலர் தன்னை உடனடியா உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்கியதாகவும் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ள விஷயம் பெருமளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக தம்முடைய முகத்தில் ஏற்பட்ட காயங்களுடன் கூடிய புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளங்கள் மூலம் நடிகை அனிகா விக்ரமன் பகிர்ந்து இருக்கிறார்.
தன்னுடைய முன்னாள் காதலன் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ள அனிகா விக்ரமன் இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்த புகாரில் நடிகை அனிகா விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலர் தன்னை உடல் அளவிலும் மனதளவிலும் பல வருடங்களாகவே துன்புறுத்தி வந்ததாகவும்,. இதனால் பெங்களூர் போலீசாரிடத்தில் புகார் அளித்ததாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக சென்னையில் தங்கியிருந்தபோது தம்முடைய முன்னாள் காதலர் தன்னை அடித்ததாக குறிப்பிட்டு இருக்கும் அனிகா விக்ரமன் அந்த நேரத்தில் தன்னுடைய காதலர் தன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டதால் புகார் அளிக்கவில்லை என்றும், இப்போது மீண்டும் மீண்டும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் அவர் மீது புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தனது காயங்களுடன் அனிகா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | பிரபல ஓடிடியில் RJ பாலாஜி & ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ரன் பேபி ரன்’ .. வெளியான ரிலீஸ் தேதி..!