யோகி பாபு - ரோபோ ஷங்கர் - சாண்டி மேடையில் ஃபுட் பாலுடன் வெறித்தனம் பாட்டுக்கு டான்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யோகி பாபு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த 'தர்பார்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

Yogi Babu, Sandy Semma Dance for Bigil Verithanam Song in Behindwoods Gold Medals 2019

அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க, சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு கோமாளி படத்துக்காக Best Supporting Actor விருது வழங்கப்பட்டது.  அப்போது மேடையில் யோகி பாபு, ரோபோ ஷங்கர், சாண்டி உள்ளிட்டோர் மேடையில் ஃபுட் பால் விளையாடினர். பின்பு வெறித்தனம் பாடலுக்கு டான்ஸ் ஆடினர். அதனை பார்த்த பிரபலங்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

யோகி பாபு - ரோபோ ஷங்கர் - சாண்டி மேடையில் ஃபுட் பாலுடன் வெறித்தனம் பாட்டுக்கு டான்ஸ் வீடியோ

Entertainment sub editor