தளபதி விஜய்யின் ’பிகில்’ – Box Officeல மட்டும் இல்ல இதுலயும் கிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

Thalapathy Vijay Atlee Bigil next achievement in Television Master

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பல சாதனைகளை செய்த இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 15ம் தேதி பொங்கல் விருந்தாக சன் டிவியில் ஒளிபரப்பானது.

தற்போது இந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள பார்வையாளர்கள் கணக்கீடு பட்டியலில் பிகில் முதலிடம் பிடித்துள்ளது. அன்றைய தினம் பிகில் ஏறத்தாழ 16,500 டெலிவிஷன் ரேட்டிங்கை பெற்று முதலிடத்தில் உள்ளது. நம்ம வீட்டுப்பிள்ளை, சண்டக்கோழி 2 திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. ’பிகில்’ வசூலிலும், சமூக ஊடகங்களிலும் செய்த சாதனைகளைத் தொடர்ந்து இந்த புதிய சாதனையை நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor