விஜய்யின் 'பிகில்' படத்தயாரிப்பாளர் உருக்கம் - ''இவங்க இல்லனா இப்படிலாம் நடந்திருக்காது''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் தற்போது விஜய் சேதுபதியுடன் 'மாஸ்டர்' பட ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'தளபதி 65' படத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Thalapathy Vijay, Atlee, AR Rahman, Nayanthara's Bigil Producer Archana Kalpathi about 100 Days in Box Office

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் படம் சத்தம் இல்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த படம் இந்த வாரத்துடன் 100 நாட்களை நிறைவு செய்யவுள்ளதாம்.

இந்நிலையில் இந்த படம் குறித்து பிகில்  பட கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பிகில் படம் இந்த வாரத்துடன் 100 நாட்களை நிறைவு செய்யவுள்ளது. உலகமெங்கும் இருக்கும் தளபதி ரசிகர்கள் இல்லாமல் இதெல்லாம் நடந்திருக்க முடியாது. அந்த வருடத்தின் மிகப் பெரிய வசூல், ரெக்கார்டு பிரேக்கிங் தமிழ் படமாக அமைந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor