'பிகில்' நடிகருக்கு அரசியல் ரீதியான எச்சரிக்கை... - பட விழாவில் அமீர் அதிரடி பேச்சு
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் அமீர் தற்போது 'நாற்காலி' என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார்.
இந்த படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பாக ஆதம் பாவா தயாரிக்கிறார். அஜயன் பாலா இந்த படத்துக்கு வசனம் எழுதுகிறார். கிருஷ்ணசாமி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் அமீர் அரசியல்வாதியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் 'மாயநதி' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமீர், இந்த மேடையில் சவுந்தரராஜாவை அழைக்கும் போது சமூகக செயற்பாட்டாளர்னு சொல்ல சொன்னாங்க. அது உங்கள் வளர்ச்சிக்கு தடை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இன்னைக்கு இருக்குற அரசியல் சூழல் ரொம்ப சிக்கலானது. நீங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மேலும் வளர்ந்து வரும் போதே நீங்கள் பொது விஷயங்களில் ஈடுபட வேண்டும். கலைஞனுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும். அரசுக்கு எதிராக வந்து நிக்குற அளவுக்கு இருக்கக்கூடாது. சினிமா என்பது வியாபாரம் தான். இங்கே வெற்றி தான் பேசும்.
'சந்தனத்தேவன்' படத்தை தொடங்கி, 35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து, இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு பீரியட் ஃபிலிம். அந்த படத்துக்கு 10 ஃபைனான்சியர்கள் வரை என்னை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் போட்ட கண்டிஷன், பொதுவெளியில் பேசக்கூடாது. மத்திய அரசு - மாநில அரசு இரண்டையும் ரொம்பவே பேசுகிறீர்கள். அதனால் சிக்கல் இருக்கிறது. இதற்கு நீங்கள் உத்தரவாதம் அளித்தால் ஃபைனான்ஸ் பண்றோம் என்றார். அப்போது என்னை விற்று சினிமா எடுப்பது பைத்தியக்காரத்தனம் என நினைத்துக் கொள்வேன். அப்படி ஒரு சினிமா என்னால் செய்ய முடியாது'' என்றார்.
'பிகில்' நடிகருக்கு அரசியல் ரீதியான எச்சரிக்கை... - பட விழாவில் அமீர் அதிரடி பேச்சு வீடியோ