“டைட்டில் செம்ம”- விஜய்யால் மெர்சனலான பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அட்லி இயக்கத்தில் மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay wishes Shanthanu for his next titled as Ravana Kottam

ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் யோகிபாபு, விவேக், டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

திரையுலகில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பது நடிகர் விஜய்யின் வழக்கம் என்பது நாம் அறிந்ததே.  இந்நிலையில், ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “இராவண கோட்டம்” என தலைப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பு வெளியானதும், முதல் ஆளாக நடிகர் விஜய், சாந்தனுவிற்கு வாழ்த்து தெரிவித்து மெசெஜ் அனுப்பியுள்ளார். அதில் ‘வாழ்த்துக்கள் நண்பா.. டைட்டில் செம்ம’ என கூறியுள்ளார். விடிந்ததும் முதல் மெசெஜே அவரிடம் இருந்து தான்.. எனவும் சாந்தனு தனது ட்வீட்டில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கண்ணன் ரவி தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் நாயகி, இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.