விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா, சோனு சூட், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் 'தேவி'. ஹாரர் காமெடி என்கிற ஜானரில் உருவான இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. இந்த படத்தில் முதல் பாகத்தில் பிரபுதேவாவும் தமன்னாவும் முதன்மை வேடத்தில் நடிக்க, நந்திதா ஸ்வேதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். விஜய் இயக்கியுள்ள இந்த படத்தின் டீஸர் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த படம் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த 'என்ஜேகே' திரைப்படமும் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.