பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் சாந்தனு பாக்யராஜ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் தயாரிப்பில் கதிர், ஓவியா நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் 'மதயானைக் கூட்டம்'. விக்ரம் சுகுமாரன் இயக்கிய இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Shanthanu Bhagyaraj to act in Vikram Sugumaran's Raavana Kottam

அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரம் சுகுமாரன் 'ராவண கோட்டம்' என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். மேலும் கண்ணன் ரவி தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கூறும்போது, "மதயானைக் கூட்டம்' வெளியான போது படத்துக்கு கிடைத்த வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதே நேரத்தில், நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. எனக்கு கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேன். தென் தமிழ்நாட்டில் சில காலம் பயணித்து ஆய்வுகள் மேற்கொண்டேன்.

சாந்தனு பாக்யராஜ் அவரது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திற்கு தயாராக மிகவும் கடுமையாக உழைப்பவர். அவர் இந்த படத்துக்கு தயாராவதற்காக கடந்த சில மாதங்களாக, பாரம்பரிய வேட்டி, சட்டையுடனே இருக்கிறார். மேலும் ராமநாதபுரத்தின் பேச்சு வழக்கில் தான் உரையாடுகிறார். அவர் நடிப்பிலும் இதே போல சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். 'ராவண கோட்டம்' படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாயகனை போலவே, கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், உடல் மொழி ஆகியவற்றை சிறப்பாக செய்யும் ஒரு நாயகியை தேடி வருகிறோம். சிறப்பான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறோம். அவற்றை உரிய நேரத்தில் அறிவிப்போம்" என்றார்.