தளபதி விஜய்யின் இந்த குணத்தை பார்த்து வியந்த பிரபல பாலிவுட் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் குறித்தும் அவருடன் நடித்த அனுபவம் குறித்தும் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் புகழ்ந்து பேசியுள்ளார்.

Katrina Kai praises Thalapathy Vijay, when they acted together for Coca cola ad

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.

மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலிவுட் டாக் ஷோ ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய்யும், கத்ரீனா கைஃபும் இணைந்து நடித்த கொகோ கோலா விளம்பர படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து கத்ரீனா பகிர்ந்துக் கொண்டார். இது பற்றி பேசிய அவர், “ஊட்டியில் விளம்பர படம் ஷூட்டிங் நடந்த போது எனக்கு எதிரில் நீண்ட நேரமாக யாரோ நிற்பது போல் இருந்தது.

நான் போன் பேசிக் கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை. பின்னர் நிமிர்ந்து பார்த்தபோது, அவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய். எனக்கு குட் பை சொல்லிவிட்டு கிளம்புவதற்காக காத்துக் கொண்டிருந்தார். என்னை தொந்திரவு செய்துவிடக் கூடாது என்பதற்காக நான் கவனிக்கும் வரை அவர் நின்றுக் கொண்டிருந்ததும், அவரது பொறுமையும் என்னை வியக்கச் செய்தது” என கத்ரீனா தெரிவித்துள்ளார்.

தற்போது அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ‘பார்த்’ திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூன்.5ம் தேதி ரிலீசாகவுள்ளது.