''தளபதி வெறியன் எங்க டைரக்டர், அவரு இப்போ தளபதி 64ல...'' - 'ஆடை' பட பிரபலம் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள படம் 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Vijay Kartik Kannan appreciates Rathna Kumar, Vijay's Thalapathy 64

இதனையடுத்து விஜய் நடிக்கும் படத்தை 'மாநகரம்', 'கைதி', படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் விஜய்யிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருக்கிறார். மேலும், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் 'மேயாத மான்', 'ஆடை' படங்களின் இயக்குநர் ரத்னகுமார் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (அக்டோபர் 3) பூஜையுடன் தொடங்கியுது. இந்த படத்துக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 'ஆடை', 'சிந்துபாத்', ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடை இயக்குநர் ரத்னகுமார் மிகப் பெரிய தளபதி வெறியன். இப்போ தளபதி 64 படத்துக்கு ரைட்டர். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழத்துகள் என்று தெரிவித்துள்ளார்.