ரியோ ராஜ் தனது மனைவியிடம் உருக்கம் - ''நான் ஒன்னும் Perfect இல்ல தான், ஆனா...''
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல டிவி தொகுப்பாளரான ரசிகர்களுக்கு அறிமுகமான ரியோ, 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனையடுத்து ரியோ, 'பானா காத்தாடி', 'செம போத ஆகாத' படங்களின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ரம்யா நம்பீசன், பால சரவணன் ரோபோ ஷங்கர், சித்தார்த் விபின், எம்.எஸ்.பாஸ்கர், ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பாஸிட்டிவ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ரியோவின் மனைவி ஸ்ருதிக்கு வளைகாப்பு நடைபெற்றது.
இந்நிலையில் ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எனக்கு தெரியும் நான் ஃபெர்ஃபெக்ட் இல்ல. ஆனால் நான் அதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.நிச்சயம் ஒருநாள் இருப்பேன்.. நான், நீ தந்த அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ எனக்கு கிடைத்தது அழகான ஆசிர்வாதம் போன்றது.
இது போல எப்பொழுதும் என்னுடன் இரு. இந்த வருடம் அப்பாவாக ஆவலுடன் இருக்கிறேன். நமக்கு திருமண நாள் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.