கமல் 60 நிகழ்ச்சிக்கு தளபதி விஜய்க்கு அழைப்பு ? - ராஜ் கமல் வெளியிட்ட தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 13, 2019 04:49 PM
கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து இந்த வருடத்துடன் 60 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலகினரும் கமல்ஹாசனிற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து கமல்ஹாசனுக்கு பாராட்டும் தெரிவிக்கும் வகையில் இசைஞானி இளையராஜாவின் தலைமையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி வருகிற நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தளபதி விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராஜ் கமல் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.
Tags : Kamal Haasan, Kamal 60, Rajinikanth, Ilaiyaraaja